அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது (26-7-1971)

அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது (26-7-1971)

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அப்பல்லோ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. அந்த வரிசையில் 15-வது அப்பல்லோவை 1971-ம் ஆண்டு விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச் சென்ற 8-வது விண்கலம் இதுவாகும். ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நிலவில் ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால்

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அப்பல்லோ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. அந்த வரிசையில் 15-வது அப்பல்லோவை 1971-ம் ஆண்டு விண்ணில் ஏவியது.

வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச் சென்ற 8-வது விண்கலம் இதுவாகும். ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நிலவில் ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

* 1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.

* 1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

* 1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

* 1974 - ஏழாண்டுகள் ராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

* 1994 - எஸ்தோனியாவில் இருந்து ரஷியப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.

* 2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.