சரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

சரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் தேர்வு செய்தது.

அதனபடி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அதிர்ச்சி அளித்தனர். 45 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.

அடுத்து இறங்கிய வேட். சம்பா, வெஸ் அகர் பொறுமையுடன் ஆடினர். வேட், சம்பா தலா 36 ரன் எடுத்து அவுட்டாகினர். வெஸ் அகர் 41 ரன் எடுத்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.1 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹொப் 38 ரன்னில் வெளியேறினார். 72 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ்  38 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. பூரன்  அரை சதமடித்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹோல்டர் 52 ரன்னில் வெளியேறினார்.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.