வவுனியா, சந்தை உள்வட்ட வீதி சிகையலங்கார நிலையத்துக்கு சென்றோருக்கான ஓர் அறிவித்தல்!

வவுனியா, சந்தை உள்வட்ட வீதி சிகையலங்கார நிலையத்துக்கு சென்றோருக்கான ஓர் அறிவித்தல்!

வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்கள் உடனடியாக தங்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி, சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றும் மூன்று பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியான நிலையில், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் வரை, குறித்த சிகையலங்கார நிலையம் இயங்கிவந்துள்ளது.

இதனால் கடந்த 10 நாட்களுக்குள் குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்கள் தாமாகவே முன்வந்து தங்களுக்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்து, கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.