சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,400 சிகரட்டுக்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,400 சிகரட்டுக்களுடன் இருவர் கைது!

தீர்வை வரியின்றி சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, 3,400 சிகரட்டுக்களுடன், வத்தளையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

பேலியகொடை - மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், வத்தளை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளைச் சேர்ந்த, 31 மற்றும் 42 வயதுடையவர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.