T20 உலகக்கிண்ணம்: சுப்பர் 12க்கு தெரிவாக இலங்கை மோத வேண்டிய 3 அணிகள்...

T20 உலகக்கிண்ணம்: சுப்பர் 12க்கு தெரிவாக இலங்கை மோத வேண்டிய 3 அணிகள்...

2021 ஆடவர் உலகக் கிண்ண 20 க்கு 20 தொடருக்கான 12 அணிகளைக் கொண்ட சுற்றுக்கு (சுப்பர் 12) தகுதி பெறுவதற்கு, இலங்கை அணி மோதவேண்டிய அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இன்று இந்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தகுதிகாண் சுற்றில், குழு ஏ இல், உள்ள  இலங்கை அணி, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா முதலான அணிகளுடன் போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின், ஓமானில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம்திகதி முதல் நவம்பர் 14 ஆம்திகதி வரை உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.