ஓட்டமாவடி மயானத்தில் 1,001 கொவிட் சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன!
கொவிட் 19 நோயால் மரணிக்கின்றவர்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - ஓட்டமாவடி மயானத்தில் 1,001 சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலான இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை புதைப்பதற்குக் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு 946 முஸ்லிம்களதும், 24 இந்துக்கள் மற்றும் 16 கிறிஸ்த்தவர்களதும் சரீரங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அலி சாஹீர் மௌலானா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 15 பௌத்தர்களின் சரீரங்களும் ஓட்டமாவடியில் இதுவரையில் புதைக்கப்பட்டுள்ளதாக அவரது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.