கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

முல்லைத்தீவில் உள்ள கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறையினர், இராணுவத்தினர் மற்றும் விமானப் படையினர் இவ்வாறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர்,  கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செயற்பாட்டை கண்டித்து கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்தை அண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறக்கூடும் என்பதால் இவ்வாறு அதிகளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.