மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் 22 பேருக்கு கொவிட்!
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 22 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 21 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இல்லத்தின் சிறுவர்கள் சிலர் காய்ச்சல் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களுக்கு கொவிட்19 தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய சிறுவர் இல்லத்தின் ஏனையவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் இவ்வாறு கொவிட்19 தொற்று உறுதியானதாக களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. இதன்காரணமாக குறித்த சிறுவர் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.