கொரோனா பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

கொரோனா பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

நாட்டில் மேலும் 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,453 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 278,972 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 253,014 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், 3,611 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.