தடைசெய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது!

தடைசெய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது!

தடைசெய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மல்லாவி காவல்துறையினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக மல்லாவி காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும், எருவில் மற்றும் உயிலங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மல்லாவி காவல்துறை குறிப்பட்டுள்ளது.