பலாப்பழம் பறிக்க சென்ற சிறுவன் கால்வாயில் வீழ்ந்து மரணம்

பலாப்பழம் பறிக்க சென்ற சிறுவன் கால்வாயில் வீழ்ந்து மரணம்

ஹுங்கம பிரதேசத்தில் பலாக்காய் பறிக்க சென்ற சிறுவன், மரத்துக்கு அருகில் இருந்த கால்வாயொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

14 வயதான குறித்த சிறுவன் நோனாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாய் சுகவீனமுற்ற காரணத்தால் சிறுவன் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதவான் விசாரணையின் பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பலாப்பழம் பறிப்பதற்காக சென்ற சிறுவன் வீடு திரும்பாத காரணத்தால் அவரை தேடியபோது, பலா மரத்திற்கு அருகில் உடைந்த கதிரையும் பாதணிகளும் இருந்துள்ளன. 

அதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தேடுதலையடுத்து சிறுவன் கால்வாயிலிருந்து உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹுங்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.