உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஆயிரத்தினால் குறைக்குமாறு யோசனை முன்வைப்பு!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஆயிரத்தினால் குறைக்குமாறு யோசனை முன்வைப்பு!

தற்போதைய முறைமையின் ஊடாக உள்ளூராட்சி  மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது, இந்த எண்ணிக்கை ஆயிரத்தினால் குறைக்கப்பட வேண்டும் என யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முறைமை தொடர்பான ஆராய்வுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் இறுதி அறிக்கையானது, அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள்
இக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தற்போதைய முறைமையின் ஊடாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தேவையற்ற அதிகாிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் தேர்தலின்போது, இந்த எண்ணிக்கை குறைந்தது ஆயிரத்தினால் குறைக்கப்பட வேண்டும் என குறித்த ஆலோசனைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைவிட இந்தக் குழுவினால் மேலும் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 8, 356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.