மனித கண் இப்படி இருக்குமா? வைரலாகும் புகைப்படம்

மனித கண் இப்படி இருக்குமா? வைரலாகும் புகைப்படம்

மனித கண் க்ளோஸ்-அப் முறையில் இப்படித் தான் இருக்கும் என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மனித கண் போன்றே காட்சியளிக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட மனித கண் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் படம் இஸ்லாம் கடவுளை போற்றும் தலைப்புடன் பகிரப்பட்டு வருகிறது.

 

வைரல் படத்தை இணையத்தில் தேடிய போது, அது மனித கண் இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது கணினியில் உருவாக்கப்பட்ட ஓவியம் ஆகும். இதனை போலாந்தை சேர்ந்த வரைகலை நிபுணர் யூஜின் பிலிமோனோவ் கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும்.

 

 

 இன்ஸ்டா பதிவு ஸ்கிரீன்ஷாட்

 

இணைய தேடல்களில் இந்த படத்துடன் மேலும் இரு படங்கள் கிடைத்தன. இவற்றை லண்டனை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதே படத்தை பிலிமோனோவ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.