ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பாக மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் நலனுக்காகவே செயற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என்றும் நாட்டை சீராக முகாமைத்துவப்படுத்தி முன்னேற்றிச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சி திட்டம் வகுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனை இன்றைய தினம் மக்கள் முன் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.