உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள்  இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

அதனடிப்படையில் கம்பஹா, கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த பிரதேசமும், ரபர்வத்த பிரதேசமும்

 

கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவும்

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.