மஸ்கெலியாவில் மேலும் 33 பேருக்கு கொவிட்

மஸ்கெலியாவில் மேலும் 33 பேருக்கு கொவிட்

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் மேலும் 33 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்தியர் டி.சந்திரராஜன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 07 ஆம் திகதி 143 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்ற நிலையில், 33 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

மஸ்கெலியா நகரப் பகுதியில் 25 பேருக்கும், நோர்வூட் நகரப் பகுதியில் 08 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.