இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில், இன்று(12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு - பிள்ளையாரடி பகுதியில், உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்னால், கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மணல் ஏற்றும் பாரவூர்தியின் சாரதியான மகாலிங்கம் பாலசுந்தரன் பலியானார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.