திம்புள்ளையில் வாகன விபத்து - இருவர் படுகாயம்
திம்புள்ள - பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான சிற்றுந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து உந்துருளியில் பயணித்த இருவரும் படுகாயமைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.