வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடி: டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடி: டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

கடந்த 2006 ஆம் ஆண்டில், வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ராதா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதற்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.