கல்கிஸ்ஸை சிறுமி விவகாரம்: வங்கியாளரும், காவல்துறை அதிகாரியும் விளக்கமறியலில்

கல்கிஸ்ஸை சிறுமி விவகாரம்: வங்கியாளரும், காவல்துறை அதிகாரியும் விளக்கமறியலில்

15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் வங்கியாளரும், காவல்துறை அதிகாரியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கல்கிஸ்ஸையில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட விடயத்தில் சம்மந்தப்பட்ட அவர்கள் இருவரும், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

கைதான முன்னாள் வங்கி முகாமையாளர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்தவர்.

அதேநேரம் குறித்த காவல்துறை அதிகாரி, காவல்துறை விளையாட்டுப் பிரிவில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவர்களை 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இருதயசிகிச்சை நிபுணர், இரத்தினக்கல் வியாபாரி மற்றும் மாலைத்தீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட 36 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.