தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகை கட்டி மஞ்சள் மீட்பு!
தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகை கட்டி மஞ்சள், மண்டபம் - வேதாளை கடற்பரப்பில் மீட்கப்பட்டன.
தனுஷ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்குச் சட்ட விரோதமாக உலர்ந்த மஞ்சள் முட்டைகள் கடத்தப்படவிருப்பதாக மண்டபம் கடலோர படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதன்போது வேதாளை மீன்பிடி துறைமுக கடலில் பதிவு எண் இல்லாத சந்தேகத்திற்கு இடமான முறையில் நாட்டுப் படகு ஒன்று பயணித்துள்ளது.
குறித்த படகை நோக்கி கடலோரப் படையினர் சென்ற போது, படகிலிருந்த நபர்கள் கடலில் குதித்துத் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து நாட்டுப் படகுடன், 1,350 கிலோ மஞ்சள் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தப்பிச் சென்றவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.