பலமிக்க உலகத் தலைவர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவலிக்கு கோட்டாபய சிறந்த நடவடிக்கை!

பலமிக்க உலகத் தலைவர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவலிக்கு கோட்டாபய சிறந்த நடவடிக்கை!

உலகில் பலமிக்க தலைவர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவலியாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளதால், அச்சமின்றி வாழ முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் முககவசங்களை அணிவதில்லை. கொரோனாவுக்கு அஞ்சாமல் வாழக்கூடிய இயலுமை ஏற்பட்டுள்ளது. இதனால், நான் முககவசம் அணியாமல் கூட்டத்திற்கு வந்தேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் காரணமாகவே இந்த சூழல் ஏற்பட்டது.

அன்று கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்திருந்தால், தற்போது பிணங்களை குவியலாக புதைக்கும் நிலைமை உருவாகி இருக்கும். இதனால், கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை விலை மதிப்பிட முடியாது. இன்று நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தமது வாக்கின் பெறுமதியை சரியாக புரிந்துக்கொண்டு செயற்பட்டனர்.

இதன் காரணமாக துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படவில்லை. இம்முறை மக்கள் தமது வாக்குகளை அப்படியான பெறுமதியுடன் வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.