முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து: மே.தீவுகள் துடுப்பாட்டம்!

முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து: மே.தீவுகள் துடுப்பாட்டம்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் கிரைஜ் பிரத்வெயிட் 20 ஓட்டங்களுடனும், ஷாய் ஹோப் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 147 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இதன்போது, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் அண்டர்சன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல், மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும், செனோன் கெப்ரியல் 4 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.

தற்போது இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடரவுள்ளது.