15 வயது சிறுமி பணத்துக்காக விற்பனை: மேலும் ஒருவர் கைது
15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கண்டியில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று கொழும்பு நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
15 வயதான சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கண்டியில் வைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாடகரும், நடிகரும் என கூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.