ப்ளொக் கற்கள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நபர் - வெள்ளவத்தையில் சம்பவம்
கொழும்பு- வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தையில் உள்ள சுவிசுதராம பகுதியில் கட்டுமாணப்பணிகள் இடம்பெற்றுவந்த ஒரு கட்டடத்தில் இருந்த ப்ளொக் கற்கள் விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தினமான இன்று குறித்த கட்டடத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்தின் மீது ப்ளொக் கற்கள் விழுந்துள்ளன.
இதனையடுத்து மகிழுந்தினுள் இருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.