யாழில் காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 8 காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 34 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்புடையவர்களையே சுகாதாரப் பிரிவு தனிமைப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே - 276 கிராம சேவகர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய 38 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர.
அதேநேரம், குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவருடன் கடமையாற்றும் 8 காவல்துறை உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.