குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி காப்பாற்றுவார் – மக்கள் நம்பிக்கை

குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி காப்பாற்றுவார் – மக்கள் நம்பிக்கை

குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிறந்த முறையில் அமைத்துக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறதென மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்குலிய பகுதியிலுள்ள மக்களை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களது குறைகளை கேட்டு அறிந்துக்கொண்டார். இதன்போதே மக்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த மக்கள் ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மேலும் தற்போதைய சமூகத்தில் சிறியவர்கள் முதல் பெரியோர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர்.

இதனால் சமூகமானது பாரிய பேரழிவை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

இந்த பிரச்சினைக்கு உங்களால்தான் சிறந்த தீர்வை முன்வைக்க முடியுமென நாங்கள் அனைவரும் நம்புகின்றோம்.

அத்துடன் மீதமுள்ள சேரிகளையும் அகற்றி எங்களுக்கு நல்லதொரு வீட்டுத்திட்டதை அமைத்து தருவீர்கள் என்றும் நம்புகின்றோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, குறித்த விடயங்களுக்கு உரிய தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவேன் என அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.