இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்

இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியீட்டி இருந்தது.

அத்துடன் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முன்னதாக இடம்பெற்ற டி20 போட்டித் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.