சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது- ஹோல்டர் 6 விக்கெட் சாய்த்தார்

சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது- ஹோல்டர் 6 விக்கெட் சாய்த்தார்

கேப்ரியல், ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சவுத்தாம்ப்டன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது.

சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது- ஹோல்டர் 6 விக்கெட் சாய்த்தார்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்று அடிக்கடி மழை இடையூறு செய்ததால் முதல் நாளில் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி் டக்அவுட்டில் வெளியேற ரோரி பேர்ன்ஸ் 20 ரன்னுடனும், ஜோ டென்லி 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டென்லி மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையிலும், ரோரி பேர்ன்ஸ் கூடுதலாக 10 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கிராவ்லி 10 ரன்னிலும், ஒல்லி போப் 12 ரன்னிலும் வெளியேறினர். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் பெரிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த முயற்சிக்க, ஹோல்டர் இந்த ஜோடியை பிரித்தார்.

பென் ஸ்டோக்ஸ் 43 ரன்னிலும், பட்லர் 35 ரன்னிலும், ஆர்சர் ரன்ஏதும் எடுக்காமலும் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 157 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது. ஹோல்டர் ஐந்து விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

கேப்ரியல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த டென்லி

டொமினிக் பெஸ் ஒருபக்கம் தாக்குப்பிடித்து நின்றாலும், மறுமுனையில் மார்க் வுட் (5), ஜேம்ஸ் ஆண்டர்சன்  (10) ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 67.3 ஓவரில் 204 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. பெஸ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து கடைசி இரண்டு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டும், கேப்ரியல் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார். இங்கிலாந்து ஆல்-அவுட் ஆனதும் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது.