உன் 'மாஸ்டர்'பிளான் தான் என்ன? விஜய்சேதுபதிக்கு பார்த்திபன் கேள்வி
விஜய்சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி விஜய்சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. மேலும் இந்த போஸ்டருக்கு பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் எதையும் வித்தியாசமான முறையில் தெரிவிக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று ‘துக்ளக் தர்பார்’ போஸ்டர் வெளியானதும் தனது சமூக வலைத்தளத்தில், ‘நண்பர் விஜய் சேதுபதிக்கு DOUBLE வெற்றியாகவும், நாணயமிக்க லலித் அவர்களுக்கு மிக்க நாணயங்களும், இயக்குனருக்கு கோடிகள் கூடுதலாகவும், (இச்சமயத்தில் குறைக்கச் சொல்லி சங்கங்கள் சொல் மீறியும்) உடன் நடிப்போரும் பேரும் பெற வாழ்த்துக்கள்! என்று தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது மீண்டும் பார்த்திபன், தன்னுடன் விஜய்சேதுபதி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு ”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன? என்று கூறியுள்ளார்.
துக்ளக் தர்பார்’ படத்தில் பார்த்திபனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 9, 2020
உன் MASTER plan தான் என்ன? pic.twitter.com/nhcaEIZMUJ