சஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980

சஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980

சஞ்சய் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். 11 ஆம் வகுப்பு வரையே பயின்ற, சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான

சஞ்சய் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். 11 ஆம் வகுப்பு வரையே பயின்ற, சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.

சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.
 
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.

சஞ்ஜய் காந்தி, தன்னைவிட வயதில் இளையவரான மேனகா காந்தியை மணந்தார். அவர்களது மணவாழ்வு கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆயினும் அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது. அவர்களுக்கு வருண் காந்தி என்ற ஒரு மகன் பிறந்தான். இவர் தனது மூத்த சகோதரருடன் கொண்ட உறவு சுமுகமானதல்ல. 1977 ஆம் ஆண்டில் அரசியல் தோல்விக்குப் பின் இவரது அன்னையின் நிலைமை ராஜீவை மிகவும் ஆழமாக பாதித்தது. பிரான்க் எழுதிய இந்திராவின் சரிதையில் கூறியுள்ளபடி, இந்திராவின் நிலைமைக்கு சஞ்ஜய்தான் காரணம் என நேரடியாக ராஜீவ் குற்றம் சாட்டினார். இது, சஞ்ஜய் அவரது அன்னை மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருந்த, அழிவுக்கு வழிவகுக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.

சஞ்ஜய் காந்தி, புதுதில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையம் அருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதன் இதே தேதியில் இறந்தார். தில்லி விமானக் கழகத்தின் புதிய விமானம் ஒன்றை இவர் ஓட்டிக் கொண்டிருந்தார். இவரது அலுவலகத்தின் மேலே ஒரு வளைவுச் சுற்றை நிகழ்த்தியபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நொறுங்கி விழுந்தது. விமானத்தின் ஒரே பயணியாக இருந்த இராணுவத்தலைவர் சுபாஸ் சக்சேனாவும் அவ்விபத்தில் இறந்தார்.