நேற்று மாத்திரம் 2,028 பேருக்கு கொவிட் தொற்று!

நேற்று மாத்திரம் 2,028 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் 2,028 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 239,689 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,996 பேர் நேற்று குணமடைந்தனர். தொற்று உறுதியானவர்களில் இதுவரையில் 201,389 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்று உறுதியான 35,766 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.