இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில், ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட் தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதை தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் நாளாந்த கொவிட் நிலவர அறிக்கைக்கைகளின் மூலம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதற்கமைய, ஜுன் மாதம் முதலாம் திகதி அறிக்கையின்படி, ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை 8 ,548 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது 10,363 ஆக உயர்வடைந்திருந்தது.

இதேநேரம், இந்தியாவில் ஜுன் மாதம் முதலாம் திகதி ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19,225 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய நாள் வரையில், இந்த எண்ணிக்கை 20,876 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.