சஜித் மற்றும் அவரது மனைவி பூரண குணம்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 23 ஆம் திகதி அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பூரண குணமடைந்த அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.