சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்

சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்

அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்

சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்

அபுதாபி :

அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த யூகோவ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறியிருப்பதாவது:-

 


அமீரகத்தில் தற்போது கடும் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்களுக்குள் ஏ.சி.எந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த எந்திரங்களை சரியாக பராமரித்து, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்வது சுகாதாரமாகும்.

இதுபோன்று அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றது. இதனை அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் டைம் பாம் என எச்சரிக்கிறார்கள். சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மோசமாக பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

சுத்தம் செய்யப்படாத ஏ.சி

அமீரகத்தின் வாழ்க்கைமுறை பொறுத்தவரையில் வீடுகள், அலுவலகங்களில் 90 சதவீதம் உள்ளே உள்ள அறைகளிலேயே இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே வெளியில் உள்ள காற்றை விட உள்ளே உள்ள காற்றானது 5 மடங்கு அதிகமாக மாசுபடுகிறது.

அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகை போன்றவைகள் கலப்பது அதிகரிக்கும் என தனியார் மருத்துவமனையின் டாக்டர் ஜானி ஆவூக்காரன் எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் வசிக்கும் பொதுமக்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே இது குறித்த விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே ஏ.சி. எந்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்து தரமான காற்றை சுவாசிக்க பராமரித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.