அமெரிக்காவில் தோசை கடை மூலம் பிரபலமான யாழ்ப்பாண தமிழர்!

அமெரிக்காவில் தோசை கடை மூலம் பிரபலமான யாழ்ப்பாண தமிழர்!

அமெரிக்காவில் தோசை கடை தொடங்கிய கந்தசாமியின் இன்றைய நிலைப்பற்றிய தகவல் வெளியாகியுள்ளன.
பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற தமிழர் ஒருவர் இன்று தன திறமையால் உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அந்த நபர் தான் கந்தசாமி, தள்ளு வண்டி கடை ஒன்றை வைத்து மட்டுமே உலகம் முழுதும் பிரபலியம் ஆன ஒருவர் உண்டென்றால் அது கந்தசாமி மட்டுமே. இவரது கடை வாஷிங்டன் சதுக்கத்தில் தான் அமைந்திருக்கும். அங்கு வருவோர் இவரது தோசையை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் செல்லுவர்.

நாளடைவில் அவர் அந்த பகுதியில் மிகவும் பிரபலம் அடைந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலையோர உணவகங்களுக்கான போட்டியில் இவர் வென்ற கோப்பையும் அதற்கான சான்றிதழும் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களை கவரும் வண்ணம் இடப்பெற்றிருக்கும். மேலும் அவரிடம் பேசுகையில் அவர் தெரிவித்ததாவது,

” நான் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவன். கொழும்பில் ட்ராவல் ஏஜென்சி வைத்திருந்த நான் பணியின் காரணமாக பாங்காக் சென்றேன். அப்போது சமைக்க தெரியுமா என கேட்டனர். அதற்கு ஆம் என்ற நான் அன்று முதல் பாங்காக் செல்லும்போதெல்லாம் சமையல் செய்து அதற்கான ஊதியமும் பெற்று வந்தேன்.

அதனையடுத்து பிழைப்பிற்காக 2001ம் ஆண்டு நியூயார்க் நகருக்கு வந்த நான் அங்குள்ள இரட்டை கோபுரம் அருகே சிறிய தள்ளுவண்டி கடை ஒன்றை தொடங்கினேன். மேலும் தமிழ்நாட்டின் உணவனுகளை மிகவும் மலிவான விலையில் கொடுக்க தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மக்கள் மீண்டும் மீண்டும் கடைக்கு வரும் வகையில் அனைத்து வகையான தோசைகளும் அமைந்தன.

சாலையோர உணவுகளை சாப்பிடுவதால் பல பிரச்சனை உருவாகும் என்பார்கள், ஆனால் எனது உணவகத்திற்கு வருவோருக்கு அதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படவில்லை. அதனால் தான் கடந்த 20 வருடங்களாக எனக்கு இங்கு ஏராளமான சொந்தங்கள் கிடைத்துள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.