தனியார் வங்கிகள் செயற்படும் விதம் தொடர்பான விபரங்கள்!

தனியார் வங்கிகள் செயற்படும் விதம் தொடர்பான விபரங்கள்!

நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற் கொண்டு இன்று (07) முதல் அடுத்த வாரம் முழுவதும் நாட்டில் முன்னணி தனியார் வங்கிகள் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இணைய வழி அல்லது தன்னியக்க இயந்திரங்களை பயன்படுத்தி முன்னெடுக்குமாறு குறித்த வங்கிகள் அறிக்கையொன்றினை வெளியிட்டு தமது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளன.

இதற்கமைய, சம்பத் வங்கி (Sampath Bank), கொமர்ஷல் வங்கி (Commercial Bank) மற்றும் என்.டி.பி வங்கி (NDB) என்பன எதிர்வரும் வாரம் முழுவதும் மூடப்படும் என்றும், ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) நாளை (8) மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செலான் வங்கியின் (Seylan Bank) சில கிளைகள் மட்டுபடுத்தப்பட்ட நேரத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் எந்தவொரு அரச வங்கியும் மூடப்படுவது அல்லது  சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.