காங்கேசன்துறைக்கான ரயில்சேவை - புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
சகல அலுவலக ரயில் சேவைகள் இரவுநேர தபால் ரயில் சேவை தூர இடங்களுக்கான ரயில் சேவை என்பன எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் சேவை மற்றும் கல்கிஸை - காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகள் என்பன திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படமாட்டாது என புகையிரத பொது முகாமையாளர் வி.எஸ் பொல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.
புகையிரத பயணத்திற்கான ஆசனங்களை ஒதுக்கிகொள்ளும் வசதி வழமை போன்று நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத நேர அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு புகையிரத பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணங்களின் போது கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறும் புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் புகையிரத பயணங்களை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.