இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் டக்வோர்த் லூயிஸ் முறையில் பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், 2-0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று 247 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதனடிப்படையில் பதிலுக்கு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது, மழைகுறுக்கிட்டது.

இந்நிலையில், 40 ஓவர்களில் இலங்கை அணி 9  விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனடிப்படையில், டக்வோர்த் லூயிஸ் முறையில் 103 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி, இலங்கை எதிரான தொடர் ஒன்றை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.



Image