இலங்கை அணிக்கு 247 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி டாக்கா, ஷரே பங்க்ளா விளையாட்டரங்களில் இன்று ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணிசார்பில் முஷ்பிகூர் ரஹீம் 125 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.
பந்துவீச்சில் துஷமந்த சமீர 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகேன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதற்கமைய, 247 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.