இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டில் இன்று இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைப் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ,ஊவா ஆகிய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய மாகாணங்களிலும் காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களை பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.