நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் பறிமுதல்: பொலிஸார் அதிரடி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் பறிமுதல்: பொலிஸார் அதிரடி

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய, இது வரையில் ஒப்படைக்கப்படாத அரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி 11 அரச வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு வாகனங்கள் மாத்திரம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு மேற்கொண்ட போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை மார்ச் 2 ஆம் திகதிக்குள் அரச வாகனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சக்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனினும் அந்த அமைச்சர்கள் இன்னமும் தங்களின் வாகனங்களை ஒப்படைக்கத் தவறியுள்ளதாகவும் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசிப்பிரியவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேர்தல் சட்டங்களை மீறி அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அவற்றை பறிமுதல் செய்யவும் தேர்தல் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.