ஆப் ஸ்டோர் பயனர்களை காப்பாற்றிய ஆப்பிள்

ஆப் ஸ்டோர் பயனர்களை காப்பாற்றிய ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த மோசடி நோக்கம் கொண்ட பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான தளம் என அவ்வப்போது தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த சுமார் 150 கோடி டாலர்கள் மதிப்பிலான மோசடி பண பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஆப்பிள் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

 

 ஆப்பிள் ஆப் ஸ்டோர்

 

 

இவ்வாறு செய்ததில் ஆப்பிள் வாடிக்கையாளர்களின் பணம், தகவல்கள் மற்றும் நேரம் காப்பாற்றப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான புது செயலிகள் சரியான தகவல்களை வழங்காததால் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

 

மேலும் பத்து லட்சத்திற்கும் அதிக அப்டேட்கள் நிராகரிக்கவோ அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. செயலிகளை ஆய்வு செய்யும் குழு சுமார் 48 ஆயிரம் செயலிகளில் தவறான அம்சங்களை கொண்டிருந்ததால், நீக்கப்பட்டுள்ளன. இத்துடன் பயனரின் பிரைவசி விதிகளை மீறியதாக 2.15 லட்சம் செயலிகள் நீக்கப்பட்டன.