மதுபான விடுதியில் மோதலா? மறுப்பு தெரிவித்த டேவிட் வார்னர்!

மதுபான விடுதியில் மோதலா? மறுப்பு தெரிவித்த டேவிட் வார்னர்!

ஆஸி அணியின் வீரர் டேவிட் வார்னருக்கும் மைக்கேல் சிலேட்டருக்கும் இடையே மதுவிடுதியில் மோதல் எழுந்ததாக வெளியான செய்தியை இருவரும் மறுத்துள்ளனர்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆஸி வீரர்கள் இப்போது மாலத்தீவுகளில் தங்கியுள்ளனர். அங்கிருந்து இன்னும் சில நாட்களில் அவர்கள் ஆஸிக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் அங்கு ஒரு மதுபான விடுதியில் ஆஸி வீரர் டேவிட் வார்னருக்கும், வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான மைக்கேல் ஸ்லாட்டருக்கும் இடையே மோதல் எழுந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை இருவருமே மறுத்துள்ளனர்.