எல்லையில் அதிநவீன தாக்குதல் திறன் கொண்ட வாகனங்களை நிறுத்தியது இந்தியா!
லடாக் எல்லையில் சீன இராணுவத்தினரின் தாக்குதலைச் சமாளிக்க அதிநவீன வாகனங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதி நவீன ஆயுத அமைப்புகளைக் கொண்ட உலகின் மிகச் சிறந்த போர் வாகனங்களில் ஒன்றான சரத் BMP2 வாகனத்தை இந்தியா நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வகையைச் சேர்ந்த வாகனங்கள் ஏவுகணைகள், மோட்டார் குண்டுகள், ரொக்கெட்டுக்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் கொண்டவையாக காணப்படுகின்றன.
துல்லிய தாக்குதல் திறன்கொண்ட குறித்த வாகனங்கள் டி.எஸ்.டி.பி.ஓ எனப்படும் Darbuk–Shyok-Daulat Beg Oldi சாலையிலும், கல்வான் பள்ளத்தாக்கின் வாயிலும் இ.டி.பி.ஓ நோக்கிச் செல்லும் சாலையிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.