900,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!

900,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!

எதிர்வரும் ஜுலை மாதத்தில் 900, 000 பைஸர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் பைஸர் நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் 4.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒக்டோபரில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.