கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்

நிபுணர்களின் கருத்துக்களை பெற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி தொற்று நோய் வைத்திய நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாயொருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானால், நிமோனியா நிலை ஏற்படக்கூடுவதுடன் வேறு சில நோய் நிலைகளும் ஏற்படக்கூடும்.

இதனால் தாயின் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இந்தநிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியினை செலுத்த முடியும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இது குறித்து சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதுடன் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசியினை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.