யாழில் தரக்குறைவாக பேசியவரை புரட்டியெடுத்த இளம் யுவதி!
யாழ். நகர் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட அதிஸ்டலாபச் சீட்டு விற்பனை செய்யும் நபருக்கு அந்த பெண் இழுத்துப் போட்டு உதைத்துள்ளார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்துள்ளார்.
குறித்த நபர் பெண்ணின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடுமாறு கதறியதை அடுத்து இனி இவ்வாறு பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் நிலமை மோசமாகும் என்று எச்சரித்ததுடன் அவரை பொலிஸ் நிலையத்துக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.