நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு வேளையில், மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பாகங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்க பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.