1000 ரூபா அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

1000 ரூபா அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக்கோரி முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.